உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கான கே.ஒய்.சி., விதிகள் தளர்த்தப்பட்டது

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கான கே.ஒய்.சி., விதிகள் தளர்த்தப்பட்டது

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, கே.ஒய்.சி., விதிகளை தளர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்தாண்டு அக்டோபர் மாதம், அனைத்து மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைத்தால் மட்டுமே, 'கே.ஒய்.சி.,யில் பதிவு செய்தவர்' என்ற சான்று வழங்கப்பட்டு முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் செபி தெரிவித்திருந்தது. கடந்த மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாக இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த உத்தரவை பின்பற்றாத கிட்டத்தட்ட 1.30 கோடி முதலீட்டாளர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. இந்நிலையில், இவர்களுக்கு உதவும் வகையில், தற்போது செபி அதன் உத்தரவை தளர்த்தியுள்ளது. இதன்படி, ஆதாருடன் பான் அட்டையை இணைக்காதோர், அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் மற்ற ஆவணங்களை வழங்கினாலே, கே.ஒய்.சி.,யில் பதிவு செய்தவர் என்ற சான்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படும். இதனை வழங்குவோர், தாங்கள் ஏற்கனவே முதலீடு செய்திருக்கும் பண்டுகளில் மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர். மற்றபடி வேறு புதிய பண்டுகளில் முதலீடு செய்ய முடியாது.புதிய பண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், 'கே.ஒய்.சி., விதிகள் சரிபார்க்கப்பட்டவர்' என்ற சான்றைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றைப் பெற ஆதார் - பான் அட்டை இணைப்பு அவசியமாகும்.ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைக்காத 1.30 கோடி முதலீட்டாளர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டது

கே.ஒய்.சி., என்றால் என்ன ?

கே.ஒய்.சி., என்பது, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பங்கு தரகர்கள், முதலீடு செய்யத் துவங்கும் முன், முதலீட்டாளரின் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டிய கட்டாய நடவடிக்கையாகும். இது முதலீட்டு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்யவும், மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் உதவி புரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை