உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இயற்கை ரப்பர் தட்டுப்பாடு டயர் உற்பத்தி 10% சரிவு

இயற்கை ரப்பர் தட்டுப்பாடு டயர் உற்பத்தி 10% சரிவு

புதுடில்லி:இயற்கை ரப்பர் தட்டுபாடால், இந்தியாவில் உள்ள சில டயர் ஆலைகளின் உற்பத்தி, கடந்த ஜூலையில் 10 சதவீதம் குறைந்துள்ளதாக, வாகன டயர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு இயற்கை ரப்பர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இயற்கை ரப்பர் உற்பத்தி, கடந்த ஜூனில் 60,000 டன்னாக திட்டமிடப்பட்ட நிலையில், 30,000 டன் மட்டுமே கிடைத்தது. இதனால் சில ஆலைகளின் டயர் உற்பத்தி, கடந்த மாதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.உள்நாட்டு சந்தையில், இயற்கை ரப்பரின் ஒரு குறிப்பிட்ட அடிப்படை அளவை, டயர் உற்பத்தி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஆனால் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை