உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிற மாநில கிளை அலுவலகங்களை ஐ.எஸ்.டி., பதிவு செய்வது கட்டாயம்

பிற மாநில கிளை அலுவலகங்களை ஐ.எஸ்.டி., பதிவு செய்வது கட்டாயம்

புதுடில்லி,:பல்வேறு மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்கள், தங்களது கிளை அலுவலகங்களை, ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், ஐ.எஸ்.டி., எனப்படும் உள்ளீட்டு சேவை வினியோகஸ்தர்களாக 2025, ஏப். 1க்குள் பதிவு செய்வது கட்டாயம், என அறிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கையாக, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில், இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மத்திய மறைமுக வரிகள் வாரியம், பல்வேறு மாநிலங்களில் தொழில் செய்யும் நிறுவனங்கள், 2025, ஏப்ரல் 1ம் தேதிக்குள், உள்ளீட்டு வரி பயனை பெற, தங்களது கிளைகளை, உள்ளீட்டு சேவை வினியோகஸ்தர்களாக பதிவு செய்வது கட்டாயம் என அறிவித்து உள்ளது. உள்ளீட்டு வரி பயன் விபரங்களை பகிர்வதன் வாயிலாக, ஒரே பான் எண் கொண்ட, பல்வேறு கிளைகளின் விற்றுமுதல் விகிதத்தை அறிய முடியும்.இது குறித்து ஆடிட்டர் சேகர் கூறியதாவது:ஒரு நிறுவனம், ஒரு மாநிலத்தில் வரி அதிகம் கட்ட வேண்டியுள்ளது. மற்றறொரு மாநிலத்தில் வாங்கிய பொருட்களுக்கு அதிக வரி செலுத்தப்பட்டுள்ளது. வாங்கிய பொருட்களுக்கு அதிக வரி செலுத்திய மாநிலத்தில் இருந்து, விற்பதில் வரி கட்ட வேண்டிய மாநிலத்திற்கு இந்த, 'கிரெடிட்' எடுத்து செல்லப்படுகிறது. இதனால், எல்லா மாநிலத்திலும் பொருட்களின் விலை சமமாக இருக்க பயன்படுகிறது. இந்த முறை இந்தியாவில் சேவை வரி இருந்த காலத்தில் இருந்தே உள்ளது. இது இப்போது வந்ததில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை