உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ராணுவ உபகரண தயாரிப்பு பட்டியல் வெளியீடு

ராணுவ உபகரண தயாரிப்பு பட்டியல் வெளியீடு

புதுடில்லி:மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தித் துறை, 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 346 ராணுவ உபகரணங்களை கொண்ட ஐந்தாவது உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில், 1,048 கோடி ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள், அமைப்புகள், துணை அமைப்புகள் உட்பட பல உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளன.கடந்த நான்கு பட்டியலில், 4,666 உபகரணங்கள் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,972 உபகரணங்கள், தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தின் கீழ் 12,300 உபகரணங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை