உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்

பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்

புதுடில்லி:“உலகளவில் உள்ள முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். “நம் நாட்டு தொழில்துறையினர் இந்த பொன்னான தருணத்தை பயன்படுத்தி, இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதில், தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு, டில்லியில் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில், பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:ஆண்டுக்கு, 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து வரும் இந்தியா, உலகின், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் நாள் இன்னும் வெகுதுாரத்தில் இல்லை.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், நம் நாடு இந்த இடத்தை அடைந்து விடும்.உலகமே இன்று இந்தியாவையும் உங்களையும் உற்று நோக்குகிறது. அரசின் கொள்கைகள், அர்ப்பணிப்பு மற்றும் முதலீடு ஆகியவை, உலகளாவிய வளர்ச்சியின் அடித்தளமாக மாறி வருகின்றன.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பொன்னான வாய்ப்பை, இந்திய தொழில்துறையினர் வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ