| ADDED : ஆக 07, 2024 01:56 AM
சென்னை:தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், 20 மாவட்டங்களில், 40 தொழிற்பூங்காக்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 3,275 நிறுவனங்கள், அவற்றுக்கான தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இவை தவிர, 40க்கும் மேற்பட்ட இடங்களில், புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள் புகார் தெரிவிக்க, 98943 22233 என்ற தொலைபேசி எண்ணை, சிப்காட் அறிவித்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி, சிப்காட் பூங்காவில் செயல்படும் தொழில் நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக, பொதுமக்களும் புகார் அளிக்கலாம். இதற்கான கட்டுப்பாட்டு அறை, சென்னை எழும்பூர் சிப்காட் அலுவலகத்தில் உள்ளது.