உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்டார்ட் அப் நிதியுதவி: தமிழக அரசு ஏற்பாடு

ஸ்டார்ட் அப் நிதியுதவி: தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு, நிதியுதவி, சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்கிறது.இந்நிறுவனம், 'டான்பண்ட்' திட்டத்தின் கீழ், 'அட்வான்ஸ் கம்ப்யூட்டிங்/ குவாண்டம் கம்ப்யூட்டிங், ஏரோஸ்ஸ்பேஸ், ஆட்டோமோட்டிவ், ரிமோட் சென்சிங், ரோபோடிக்ஸ், செமி கண்டக்டர், பயோடெக்னாலஜி, தகவல் தொடர்பு' உள்ளிட்ட, 15 துறைகளில் உள்ள ஸ்டார்ப் அப் நிறுவனங்களையும், அவற்றில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களையும் சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்த உள்ளது.இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களின் தொழில், அதன் சிறப்பு, சந்தை வாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக முதலீட்டாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஏற்ப, முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வருவர்.இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஜூலை 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். சிறந்த தொழில் ஆலோசனைகளை கொண்டுள்ள நிறுவனங்கள், நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை