உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொலைதொடர்பு சேவை துறை வருவாய் மார்ச் காலாண்டில் 3 சதவீதம் உயர்வு

தொலைதொடர்பு சேவை துறை வருவாய் மார்ச் காலாண்டில் 3 சதவீதம் உயர்வு

புதுடில்லி:கடந்த மார்ச் காலாண்டில், தொலைதொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய், 3.01 சதவீதம் அதிகரித்து, 87,926 கோடி ரூபாயாக இருந்ததாக, 'டிராய்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மொத்த வருவாயில் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அம்சங்கள் விலக்கப்பட்ட பின் வரும் ஏ.ஜி.ஆர்., எனும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் மதிப்பு, 70,462 கோடி ரூபாயாகும். 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்தின் ஏ.ஜி.ஆர்., கடந்த மார்ச் காலாண்டில், 25,331 கோடி ரூபாயாக இருந்தது. கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய் ஏ.ஜி.ஆர்., உடன் 'ஏர்டெல்' இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, வோடபோன், பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்கள் உள்ளன.இதே காலகட்டத்தில், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து அரசு பெற்ற உரிமத்தொகை மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு தொகை, 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து, 6,506 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை