புதுடில்லி:மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தங்களது குறைந்தபட்ச பொதுப் பங்கு விகிதத்தை 25 சதவீதமாக அதிகரிப்பதற்கான காலக்கெடுவை, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.மொத்தமுள்ள 12 பொதுத்துறை வங்கிகளில், எஸ்.பி.ஐ., கனரா உள்ளிட்ட ஏழு வங்கிகள், ஏற்கனவே குறைந்தபட்ச பொதுப் பங்கு விதிகளை பின்பற்றி வருகின்றன. மீதமுள்ள ஐந்து வங்கிகளான, 'பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அண்டு சிந்து' ஆகிய வங்கிகள், அரசின் வசமுள்ள பங்குகளை, 75 சதவீதத்திற்கு கீழாக குறைக்கும் முயற்சியில் உள்ளன.பொதுத்துறையை சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனம், குறைந்தபட்ச பொது பங்கு விகிதத்தை 10 சதவீதமாக எட்டுவதற்கு, ஏற்கனவே 2027ம் ஆண்டு மே மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசின் வசமுள்ள பங்குகள்
வங்கி சதவீதம்பஞ்சாப் அண்டு சிந்து வங்கி 98.25 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 96.38 யூகோ வங்கி 95.39 சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 93.08 பேங்க் ஆப் மஹாராஷ்டிரா 86.46
பஞ்சாப் அண்டு சிந்து வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியூகோ வங்கிசென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாபேங்க் ஆப் மஹாராஷ்டிரா