| ADDED : ஜூலை 01, 2024 12:38 AM
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பொறுப்பு தொடர்பான விதிகளையும், நிபந்தனைகளையும் எல்லாரும் அறிந்திருப்பது அவசியம். வருமான வரி சட்டத்தின்படி, மொத்த ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டாம். புதிய முறையில் இந்த வரம்பு 3 லட்சமாகும். எனவே, இந்த வரம்பிற்கு மேலே இருப்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.எனினும், வருமான வரி விலக்கு பெறும் அளவுக்கு வருமானம் இருந்தாலும், மற்ற நிபந்தனைகள் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, மின் கட்டணமாக ஆண்டிற்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தினால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என விதிமுறை இருக்கிறது. இதற்கான திருத்தம், 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.அதே போல, தனக்காக அல்லது இன்னொருவருக்காக வெளிநாட்டு பயணத்திற்காக 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேமிப்பு கணக்கில் மொத்தமாக 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.