உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / குரோமிய கழிவை அகற்ற ரூ.15 கோடியில் நடவடிக்கை

குரோமிய கழிவை அகற்ற ரூ.15 கோடியில் நடவடிக்கை

ராணிப்பேட்டை:''மூடப்பட்ட குரோமியம் வேதி நிறுவனத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், முதல்கட்டமாக குரோமிய கழிவு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.வேலுார், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் கிளை, ராணிப்பேட்டை அடுத்த பூட்டுதாக்கில் உள்ளது. அங்கு, 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' - 'டிஜிட்டல் ஹெல்த் கியோஸ்க்' நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:ராணிப்பேட்டை சிப்காட்டில் இருக்கும் குரோமியம் வேதி நிறுவனம், 1995ல் மூடப்பட்டது. அதிலுள்ள கழிவை பாதுகாப்பாக அகற்ற குழு அமைக்கப்பட்டு, நேரடியாக ஆய்வு செய்யும் பணி முடிந்தது.தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய, சுற்றுச்சூழல் நிதி மூலம், 15 கோடி ரூபாய் மதிப்பில், முதல்கட்டமாக குரோமிய கழிவு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை