மேலும் செய்திகள்
டிஜிட்டல் விளம்பரங்கள் அதிகம் நினைவில் நிற்பதோ குறைவு
19 minutes ago
வாரீ எனர்ஜிஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
27 minutes ago
அனைத்து வர்த்தக தரவுகளை அறிய புதிய தளம் துவக்கம்
30 minutes ago
புதுடில்லி:பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பைக் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் கே.டி.எம்., நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை 7,765 கோடிக்கு வாங்கி, அதன் முழுக்கட்டுப்பாட்டை பெற்று உள்ளது. ஆஸ்திரிய நிறுவனமான கே.டி.எம்., மில் 49.9 சதவீதப் பங்குகளை பஜாஜ் வைத்திருந்தது. இந்நிலையில், பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்த விரும்பிய பஜாஜ், கடனுதவி வாயிலாக நிதி திரட்டியது. பங்குகளை வாங்கும் நடவடிக்கைக்கு 9 ஒப்புதல்களை பஜாஜ் பெற வேண்டியிருந்த நிலையில், 8 ஒப்புதல்கள் இம்மாத தொடக்கத்தில் பெறப்பட்டு விட்டன. மீதமுள்ள ஒரு ஒப்புதலும் 10ம் தேதி கிடைத்ததை அடுத்து கையகப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. இதற்காக ஐரோப்பிய யூனியனின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
19 minutes ago
27 minutes ago
30 minutes ago