உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பார்சல் சேவை நிறுவனங்கள் மீது விசாரணை நடத்துகிறது சி.சி.ஐ.,

பார்சல் சேவை நிறுவனங்கள் மீது விசாரணை நடத்துகிறது சி.சி.ஐ.,

புதுடில்லி:'டி.எச்.எல்., பெட்எக்ஸ், யு.பி.எஸ்.,' உள்ளிட்ட பார்சல் சேவை நிறுவனங்களின், நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடு, சேவை கட்டணம் மீதான புகார் ஆகியவற்றின் மீதான விசாரணை குறித்து, இந்திய சந்தை போட்டிகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுஉள்ளது. ஜெர்மனியின் டி.எச்.எல்., அமெரிக்காவின் யுனைடெட் பார்சல் சர்வீசஸ் மற்றும் பெட்எக்ஸ், துபாயின் அராமெக்ஸ் போன்ற உலகளாவிய பார்சல் டெலிவரி நிறுவனங்கள், சில உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, கட்டண சலுகை மற்றும் கட்டணங்களை தீர்மானிப்பதில் கூட்டு சதி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்நிறுவனங்கள் மீது சி.சி.ஐ., எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையம், விசாரணை நடத்தி வருவதாக தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமீபத்தில், விமான நிலைய பார்சல் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண விபரங்கள் குறித்து நிறுவனங்களை விசாரித்ததை அடுத்து, லட்சக்கணக்கான மின்னஞ்சல்களை ஆய்வு செய்ய துவங்கியுள்ளதாக சி.சி.ஐ., தெரிவித்துள்ளது. மேலும், விமான நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு கட்டணங்கள் மற்றும் தள்ளுபடிகள் தொடர்பான வர்த்தக ரீதியான முக்கிய தகவல்களை இந்நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பரிமாறிக் கொண்டது, விசாரணையில் தெரிய வந்து உள்ளதாகவும் சி.சி.ஐ., தெரிவித்து உள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், சட்டங்களை மீறிய செயலாக இது கருதப்படும் என மேலும் தெரிவித்துள்ளது.சி.சி.ஐ.,யின் குற்றச்சாட்டுகளுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளன. மேலும், இது குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி தெரிவித்துஉள்ளன.கட்டண சலுகை மற்றும் கட்டணங்களை தீர்மானிப்பதில் கூட்டு சதி செய்ததாக புகார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை