மேலும் செய்திகள்
ஸ்மார்ட் போன் விலை ரூ.2,000 வரை உயர்வு
18 hour(s) ago
சேவைகள் துறை வளர்ச்சி சரிவு
18 hour(s) ago
ரூ.50,000 கோடி லாபம் ஈட்டிய பொதுத்துறை வங்கிகள்
18 hour(s) ago
புதிய தாஜ் ஹோட்டல் கட்ட ஒப்பந்தம்
18 hour(s) ago
புதுடில்லி:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடுகள் 13 சதவீதம் சரிந்து, 2.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.கடந்த 2023ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டில் மொத்த அன்னிய நேரடி முதலீடுகளின் மதிப்பு, 3.04 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 13 சதவீதம் சரிந்து, 2.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், வர்த்தகம், சேவை, தொலை தொடர்பு, வாகனம், மருந்து மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகளில் அன்னிய நேரடி குறைந்துள்ளது. அதேசமயம், கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் மின் ஆகிய துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது.அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், சிப்ரஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து, அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது. உலகளவில் அதிகரிக்கப்படும் வட்டி விகிதங்கள் மற்றும் புவிசார் பதற்றநிலை காரணமாக, அன்னிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளன.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago