உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  காஷ்மீரில் முதல்முறையாக கனிமவள ஏலம்

 காஷ்மீரில் முதல்முறையாக கனிமவள ஏலம்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், சுண்ணாம்புக்கல் வெட்டியெடுக்க, முதலாவது ஏல நடைமுறை துவக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்து உள்ளதாவது: கனிமவள மாநிலமாக ஜம்மு - காஷ்மீரை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அங்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தோடு, வெளிப்படையாக முதல் சுண்ணாம்புக்கல் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 'வளர்ந்த பாரதம் 2047' இலக்கை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசுடன் இணைந்து, இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது. மத்திய அரசு, சுரங்கத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுண்ணாம்புக்கல் சுரங்கம் தொடர்பாக வெளிப்படையான ஏலம் தற்போது நடைபெற உள்ளது. நாடு முழுதும், 95 சதவீதத்துக்கும் அதிகமான மாநிலங்கள், இந்த முறையிலான ஏலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி