உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஓ.ஆர்.எஸ்., பெயரில் பழச்சாறு பானங்கள் கடைகளிலிருந்து உடனே அகற்ற உத்தரவு உணவு தர நிர்ணய ஆணையம் அதிரடி

 ஓ.ஆர்.எஸ்., பெயரில் பழச்சாறு பானங்கள் கடைகளிலிருந்து உடனே அகற்ற உத்தரவு உணவு தர நிர்ணய ஆணையம் அதிரடி

புதுடில்லி: பழச்சாறுகள், இதர குளிர் பானங்களை இனி 'ஓ.ஆர்.எஸ்., பானம்' என்று குறிப்பிட்டு விற்பனை செய்யக்கூடாது என இந்திய உணவு தரநிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கூறியுள்ளது. நோயாளிகளுக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக ஆற்றல் தருவதற்காக 'வாய்வழி நீர்ச்சத்து உப்பு' எனப்படும் ஓ.ஆர்.எஸ்., பானங்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். ஆனால், பன்மடங்கு சர்க்கரையுடன் பழச்சாறு, இதர குளிர்பான தயாரிப்பாளர்களும் தங்களது பானங்களுக்கு 'ஓ.ஆர்.எஸ்.,' என்று பெயரிட்டு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவ்வாறு விற்கப்படும் பானங்கள், எலக்ட்ரோலைட் பானங்கள், உடனடியாக பருகக்கூடிய பானங்களை சில்லரை விற்பனை கடைகளிலிருந்து உடனடியாக அகற்றுமாறு மாநில அரசுகளுக்கு அவ்வமைப்பு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த மாதம் உணவு தர நிர்ணய ஆணையம், அனைத்து வணிகர்களையும் அழைத்து இவ்வாறு வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் படி பானங்களை பெயரிட்டு விற்பனை செய்யக்கூடாது என்று கூறியிருந்தது. இந்நிலையில், உடனடியாக அவற்றை விற்பனையிலிருந்து அகற்ற மாநில அரசுகளுக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ