உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ‛ இண்டிகோ முடிவால் குறைகிறது விமான டிக்கெட் கட்டணம்

‛ இண்டிகோ முடிவால் குறைகிறது விமான டிக்கெட் கட்டணம்

புதுடில்லி:உலகளவில் விமான எரிபொருள் விலை சரிவடைந்துள்ளதை தொடர்ந்து, 'இண்டிகோ' நிறுவனம், எரிபொருள் கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, விமான டிக்கெட் கட்டணம் குறைய உள்ளது. விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை, உலகச் சந்தை களின் நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. கடந்தாண்டு தொடர்ந்து நான்கு முறை விலை உயர்த்தப்பட்டதால், இதை ஈடுகட்ட, இண்டிகோ நிறுவனம் அக்டோபர் மாதத்தில் எரிபொருள் கட்டணம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. பயண துாரத்தைப் பொறுத்து, 300 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை, இந்த எரிபொருள் கட்டணம் வேறுபடும் என்று அப்போது தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை, மூன்று முறை விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, எரிபொருள் கட்டணத்தை திரும்பப் பெறுவதாக இண்டிகோ அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக விமான டிக்கெட்டுக்கான கட்டணமும் குறையும்; மேலும், இதர நிறுவனங்களின் டிக்கெட் விலையும் குறையக்கூடும், என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது 1 கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை, 1.02 லட்சம் ரூபாயாக உள்ளது. கடந்த அக்டோபரில் இது, 1.18 லட்சம் ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ