மேலும் செய்திகள்
உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா
23 hour(s) ago
சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
23 hour(s) ago
பசுந்தேயிலைக்கு ஆதார விலை கிலோவுக்கு ரூ.40 வேண்டும்
23 hour(s) ago
சென்னை: கோவை, கடலுார், தஞ்சை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திண்டுக்கல் உள்ளிட்ட, 31 இடங்களில் சுற்றுலா துறையில் முதலீட்டை ஈர்க்க, தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்து உள்ளது. தமிழகத்தில் தொழில் துவங்க வரும் பெரிய நிறுவனங்கள் ஆலை அமைக்க வசதியாக, பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.தமிழகத்தில் சுற்றுலா துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 25 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. எனவே, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, சுற்றுலா தொழில் பூங்காக்களை அமைக்கும் பணியில் 'சிப்காட்' ஈடுபட்டுஉள்ளது. அதன்படி, நகர்ப்புற சுற்றுலா பிரிவின் கீழ் கோவை - பட்டணம், மேட்டுப்பாளையம், கடலுார் - பெரியகொமட்டி, தஞ்சை - தளவாய்பாளையம், செங்கல்பட்டு - கேளம்பாக்கம், திருவள்ளூர் - கார்த்திகேயபுரத்தில் வணிக விடுதிகள், ரிசார்ட், ஓய்வு சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தனித்துவம் மற்றும் சிறப்பு அம்சங்களுக்கான சுற்றுலா பிரிவின் கீழ் திண்டுக்கல் - வில்பட்டி, கன்னியாகுமரி - கடயல், சன்செட் பாயின்ட், நாமக்கல் - அரியூர் நாடு, நீலகிரி - நஞ்சநாடு, நீலகிரி - கேத்தி, திருநெல்வேலி - குட்டம், நாகை - பெரியகுத்தகை, 1, 2, திருச்சி - தென்பரந்து, மயிலாடுதுறை - வனகிரி, சிவகங்கை - கொந்தகை, சேலம் - கொளகூர், திருப்பத்துார் - பீமாகுளம், திருப்பத்துார் - பெருமாபட்டு ஆகிய இடங்களில் நல்வாழ்வு மையங்கள், எழில்மிகு ரிசார்ட் போன்றவை அமைக்கப்பட உள்ளன. பெரிய மையங்களுக்கான சுற்றுலா பிரிவின் கீழ், கோவை - மாதவராயபுரம், வால்பாறை, திண்டுக்கல் - வில்பட்டி, நீலகரி - கெத்தை, விழுப்புரம் - பட்டனுார், துாத்துக்குடி - தருவகுளம், மயிலாடுதுறை - வேட்டங்குடி, சேலம் - சின்ன கல்ராயன்மலை, நாகலுார், நீலகிரி - எருமடு ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த ரிசார்ட், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சுற்றுலா திட்டம் ஏற்படுத்த 20 ஏக்கர் வரையிலான நிலத்தை 'சிப்காட்'வழங்கும் விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சிப்காட் அழைப்பு விடுத்துள்ளது
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago