| ADDED : ஜன 11, 2024 11:54 PM
காந்திநகர்:உள்ளூர் இந்திய நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிட அனுமதிப்பது குறித்து, இந்திய அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியதாக, 'நாஸ்டாக்' செயல் துணைத் தலைவர் எட்வர்டு நைட் தெரிவித்து உள்ளார்.இந்திய நிறுவனங்கள் தற்போது நேரடியாக வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிட அனுமதி இல்லை. ஆனால், இதை அனுமதிக்குமாறு பல்வேறு முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.குஜராத் நகரில் உள்ள கிப்டி சிட்டியில் மட்டும், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குச்சந்தையில் பட்டியிலிட அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை நாஸ்டாக்கின் செயல் துணைத் தலைவர் எட்வர்டு நைட், கிப்ட் சிட்டி மாநாட்டில் கூறியதாவது:இந்திய நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதற்கான விதிமுறைகள் இறுதியாக அறிவிக்கப்படும்போது, கிப்ட் சிட்டியில் மட்டுமின்றி பிற இடங்களிலும் எளிதாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.இது குறித்து, கடந்த அக்டோபரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் செபியின் தலைவர் மாதாபி பூரி புச் ஆகியோருடன் நாஸ்டாக் பேச்சு நடத்தியது.இவ்வாறு அவர் கூறினார்.