| ADDED : நவ 22, 2025 12:11 AM
சென்னை: சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பலிவால், 'இன்லேண்டு வாட்டர்வேஸ் அதாரிட்டி ஆப் இந்தியா'எனப்படும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மத்திய அமைச்சரவையின் நியமன குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவே தலைவராக இருந்த விஜய் குமார், சமீபத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டார். சுனில் பலிவாலுக்கு இந்த பொறுப்பில், மத்திய அரசின் செயலர் அந்தஸ்தும், அதற்கேற்ற சம்பளமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழக அரசில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வாரியம், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்துள்ளார்.