உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இங்கிலாந்து, கனடா பட்டய கணக்காளர்களை இந்தியாவில் பயிற்சிக்கு அனுமதிக்க கோரிக்கை

இங்கிலாந்து, கனடா பட்டய கணக்காளர்களை இந்தியாவில் பயிற்சிக்கு அனுமதிக்க கோரிக்கை

புதுடில்லி: இங்கிலாந்து மற்றும் கனடாவை சேர்ந்த பட்டய கணக்காளர்களை, பரஸ்பர ஒப்பந்தம் வாயிலாக, இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிப்பது குறித்து மத்திய அரசிடம் முன்மொழிந்துள்ளதாக, ஐ.சி.ஏ.ஐ., தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐ.சி.ஏ.ஐ., என்னும் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் மேலும் தெரிவித்ததாவது:இந்தியாவைச் சேர்ந்த பட்டய கணக்காளர்களை பயிற்சி மேற்கொள்ள இங்கிலாந்தும், கனடாவும் அனுமதிக்கும்பட்சத்தில், இந்தியாவிலும் அந்நாடுகளைச் சேர்ந்த பட்டய கணக்காளர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், இந்தியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த பட்டய கணக்காளர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இங்கிலாந்து, கனடா உடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் இதுதொடர்பாக பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா உடனும் இதே போன்று பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பரஸ்பர ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட பின், வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டய கணக்காளர்கள், ஐ.சி.ஏ.ஐ.,யுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஐ.சி.ஏ.ஐ.,யில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களும், 8.50 லட்சம் மாணவர்களும் உள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.இந்தியாவை சேர்ந்த 42,000 பட்டய கணக்காளர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை