மேலும் செய்திகள்
ரூ.100 கோடியில் தர்மபுரி தொழில் பூங்கா பணிகள்
06-Feb-2025
சென்னை:சிவகங்கை மாவட்டத்தில், தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, சிப்காட் நிறுவனம் அம்மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடி மற்றும் அதைச் சுற்றிய கிராம பகுதியில் 775 ஏக்கரில், இலுப்பைக்குடி தொழில்பூங்காவை அமைக்க உள்ளது. இந்த பூங்காவில் உள்ள தொழில்மனைகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இலுப்பைக்குடி தொழில் பூங்காவில் முதற் கட்டமாக, 100 ஏக்கரில் மட்டும் 'சிப்காட்' உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிவகங்கை இலுப்பைக்குடியில் ஒரே நேரத்தில், 775 ஏக்கரையும் மேம்படுத்தி தொழில் பூங்கா அமைத்த பின், தொழில் நிறுவனங்கள் வர தாமதமாகும்போது, கட்டமைப்பு வசதிகள் சேதமடைய வாய்ப்புள்ளது. அதேசமயம், முதற்கட்டமாக 100 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைத்து, அங்கு நிறுவனங்களை அழைத்து வந்து முதலீடு செய்வது சரியானதாக இருக்கும். ஒரு நிறுவனம் முதலீடு செய்வதைப் பார்த்து, மற்ற நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வரும். எனவே, முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் செலவில், 100 ஏக்கரில் தொழில் பூங்காவுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தப் பணியை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. வரும் ஜூனில் பூங்கா அமைக்கும் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
06-Feb-2025