உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

புதுடில்லி; இந்திய பங்குச் சந்தையில் இருந்து, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்ப பெறுவது தொடர்வதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்தது.அன்னிய செலாவணி சந்தையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து, 84.11 ரூபாய்க்கு வர்த்தகமானது. அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்திய பங்குகளை விற்று, டாலரை வாங்குவதில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து, வர்த்தகர்கள் தெரிவித்ததாவது: அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால், வர்த்தக நேரத்தின் துவக்கத்தில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை கண்டது. தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையும் உயரவே, ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதில் ரிசர்வ் வங்கி தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்தால், மேலும் ரூபாய் மதிப்பு சரியாமல் தடுக்க இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Saravanan
நவ 06, 2024 11:27

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவழியாக இருந்து என்ன பயன் இடதுசாரி கொள்கையுடைய அனைவரும் இந்தியாவிற்கு எதிரான மனபோக்கை தான் கொண்டு இருக்கிறார்கள் சீனாவின் கைகூலிகளாக இருக்காங்க.


V Gandhi Rajan
நவ 05, 2024 22:36

Its only .04 NP. During early 70s it was Rs.10 per $. After independence it was almost equal. What the gentleman was doing all these years. He can take ge as RBI Govner or PM or FM or everything. V Gandhi Rajan


K.n. Dhasarathan
நவ 05, 2024 17:13

ரிசர்வு வாங்கி கவர்னர் என்ன செய்கிறார்? பிரதமர் எங்கு போய்விட்டார்? நிதி அமைச்சர் உண்டியல் தேடுகிறாரா ? வரலாறு காணாத சாதனை வேலை தெரிந்தால் செய்யுங்கள் தெரியலையா, வேலை தெரிந்தவர்களிடம் ஒப்படையுங்கள்.


அப்பாவி
நவ 05, 2024 07:07

நேருதான் காரணம்னு அடிச்சு உடுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை