உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்காவின் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு இந்தியாவை பாதிக்காது

அமெரிக்காவின் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு இந்தியாவை பாதிக்காது

அமெரிக்காவின் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு இந்தியாவை பாதிக்காது

இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியா உடனடியாக பாதிக்கப்படாது என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளாத நாடுகளுக்கு, இயற்கை எரிவாயு ஏற்றுமதியை அந்நாடு நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில் அதன் முடிவு, குறுகிய காலத்திலிருந்து நடுத்தர கால காலத்தில், இந்தியாவின் இயற்கை எரிவாயு வினியோகத்தை பாதிக்காது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியா, அதன் அதிகபட்ச இயற்கை எரிவாயு இறக்குமதியை, கத்தார் நாட்டிலிருந்தே மேற்கொள்கிறது. அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி கணிப்புபன்னாட்டு நிதியம் உயர்த்தியது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் 2025ம் நிதியாண்டில் ஏழு சதவீதமாக இருக்கக்கூடும் என்று மத்திய நிதியமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பன்னாட்டு நிதியம் 2025 மற்றும் 2026ம் நிதியாண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இது, கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருந்த கணிப்பை விட 0.20 சதவீத புள்ளிகள் அதிகமாகும். மேலும், கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 7.20 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 6.70 சதவீதமாக இருக்கக்கூடும் என்றும் நிதியம் கணித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ