| ADDED : நவ 23, 2025 12:58 AM
பி ட்காயின் மதிப்பு கடந்த ஏழு மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து, 80,000 டாலரை நெருங்கி வருகிறது. கடந்த அக்டோபரில் 1,20,000 டாலராக இருந்த இதன் மதிப்பு, தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. சரிவுக்கான காரணங்கள் 1. ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரிப்பு 2. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி குறைப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மை 3. முதலீட்டாளர்கள் அதிக ஆபத்தான முதலீடுகளை திரும்ப பெறுதல் தற்போதைய நிலை w பிட்காயின்: 80,553 டாலர் w ஈத்தர்: 2,700 டாலருக்கு கீழ் w கடந்த வாரத்தி ல் மட்டும் 12% சரிவு நிபுணர்கள் கணிப்பு w முக்கிய ஆதரவு நிலை: 82,000 டாலர் w மேலும் சரியும்பட்சத்தில்: 78,000 டாலர் வரை w மீண்டும் 90,000 டாலரை தாண்டினால்: 98,000 டாலர் வரை உயரலாம்