உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கடந்த ஓராண்டில் பங்குகளை விட அதிக வருவாய் தந்த ரியல் எஸ்டேட்

 கடந்த ஓராண்டில் பங்குகளை விட அதிக வருவாய் தந்த ரியல் எஸ்டேட்

'நி ப்டி50'யின் ஓராண்டு வருமானத்தைவிட, நம் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தை வழங்கிய வருமானம் அதிகம் என 'ஒன் பைனான்ஸ் ஹவுசிங்' நிறுவனத்தின் 'டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸ்' அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்களில், நாட்டின் முக்கிய நகரங்களில் குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தை 15 சதவீத வருமானத்தை தந்துள்ளது. இந்த ஏற்றத்திற்கு ஊக வணிகம் காரணமல்ல; மாறாக முதல் நிலை நகரங்களில் கட்டப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மேம்பாடுதான். புதிதாக ஏற்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு திட்டங்கள், புறநகர் பகுதிகளின் அணுகலை மேம்படுத்தி, விலை மற்றும் தேவையையும் அதிகப்படுத்தியுள்ளன.

'டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸ்'குறியீடு என்பது 'ரெரா'வில் பதிவு செய்யப்பட்ட உண்மையான பரிவர்த்தனை தரவு; ஒரு சதுர அடியின் விலை, வாடகை வருமானம் மற்றும் மக்கள் தொகையின் அளவு ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த முதலீட்டில் எவ்வளவு வருமானம் (செப்டம்பர் 30,2025 வரை) சொத்து வகை ஓராண்டு வருவாய் வெள்ளி 59% தங்கம் 55% குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் 15% பங்குகள் (--3)3%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை