உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சமூக வலைதளங்களில் பதிவுகள் நிறுவனங்களுக்கு செபி கிடுக்கிப்பிடி

 சமூக வலைதளங்களில் பதிவுகள் நிறுவனங்களுக்கு செபி கிடுக்கிப்பிடி

மி யூச்சுவல் பண்டு நிறுவனங்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைத்து பதிவு செய்த நிறுவனங்கள், தங்களின் சமூக வலைதள முகப்பில், நிறுவனத்தின் பெயர் மற்றும் பதிவு எண்ணை இடம்பெற செய்ய வேண்டும் என செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அது தெரிவித்துள்ளதாவது: சமூக வலைதளங்களில், செபியிடம் பதிவு செய்யாத தனிநபர்கள், முதலீடுகள் தொடர்பாக பதிவிடுவது அதிகரித்து வருகிறது. முதலீட்டாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுப்பதற்கும், எந்த நிறுவனங்கள் உள்ளடக்கங்களை வெளியிடுகின்றன என்பதை அறியவும். இது போன்று பதிவு எண்ணை வெளியிடுவது அவசியம். நிறுவனங்கள், முகவர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோ அல்லது பிற உள்ளடக்கங்களிலும் பதிவு நிறுவனத்தின் பெயர், எண் ஆகியவை இடம்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை