உள்ளூர் செய்திகள்

tag ஐ.பி.ஓ.,

செபி ஒப்புதல் பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் ‘ரேஸர்பே சாப்ட்வேர்’ மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியாளரான ‘செம்ப்கார்ப் கிரீன் இன்ப்ரா’ ஆகிய இரு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதில் செம்ப்கார்ப் கிரீன் நிறுவனம் 3,750 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. ‘கிரிஸ்டல் கிராப்’ வேளாண் ரசாயன பொருட்களை உற்பத்தி செய்யும் ‘கிரிஸ்டல் கிராப் புரொட்டெக்ஷன்’ நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீடு வரும் நவம்பர் 18ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், ஒரு பங்குக்கான விலை வரம்பு 259–272 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் 456 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ‘வட்ரானா ரென்டல்ஸ்’ டெல்லியை சேர்ந்த ‘வட்ரானா ரென்டல்ஸ்’ நிறுவனத்தின் ஐ.பி.ஓ., நவம்பர் 19ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைய உள்ளது. ஒரு பங்குக்கான விலை வரம்பு 232 – 245 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 120 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி