நிப்டி
ஆ ரம்பத்தில் மிகவும் குறைவான நேரம் மட்டுமே சிறிய ஏற்றத்தை சந்தித்த நிப்டி, பின்னர் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில், 166 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. துறை சார்ந்த 17 குறியீடுகளில் ஒரே ஒரு குறியீடு மட்டுமே சிறிய ஏற்றத்தை சந்தித்திருந்தது.
Gallery மற்ற அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் 0.14 (மெட்டல்) முதல் 1.65 (ரியால்ட்டி) சதவிகித அளவிற்கு இறக்கத்தை சந்தித்தன. நிப்டியின் எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9):-5.20 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):0.09, செய்கின் மணி ப்ளோ (21):-0.12 என இருப்பதால், இறக்கம் இன்னும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதைப்போன்ற நிலைமையே தெரிகிறது. 25,040 என்ற எல்லையை கடந்தால் மட்டுமே, மீண்டும் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.
நிப்டி பேங்க்
வ ர்த்தக நேரத்தில், ஓரளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில், 145 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9): 97.61 ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 48.78 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.40 என்ற அளவில் இருக்கும் நிலைமையில், ஏற்றம் வருவதற்கு அவசியம் 55,050 என்ற அளவுக்கு மேலே சென்று வர்த்தகம் நடக்கவேண்டும். இது நடக்காவிட்டால், இறக்கம் தொடரவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.