உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தென்காசியில் சிப் வடிவமைப்பு மையம் அமைப்பதில் ஜோஹோ நிறுவனர் ஆர்வம்

தென்காசியில் சிப் வடிவமைப்பு மையம் அமைப்பதில் ஜோஹோ நிறுவனர் ஆர்வம்

புதுடில்லி:இந்தியா செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் முக்கிய மையமாக திகழ வேண்டும் என, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 'ஜோஹோ' நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு தென்காசி கிராமப்புறங்களில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மையம் அமைப்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று 'எக்ஸ்' சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக பா.ஜ.,வின் 'ஸ்டார்ட்அப்' பிரிவின் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி. இவர் 'இன்டெல்' நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் ஆவார். இவர் நேற்று எக்ஸ் தளத்தில், 'தென்காசியில் பா.ஜ., கூட்டணியின் வெற்றிக்காக நான் முழுமனதுடன் பணியாற்றுவேன். மேலும் இங்கு தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை கொண்டுவர தொடர்ந்து உழைப்பேன்' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் வேம்பு, “ஆனந்தனும், நானும் தென்காசியின் கிராமப்புறங்களில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மையத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். இத்துறையில் ஆனந்தனின் நிபுணத்துவம் நிகரற்றது. தென்காசியின் கிராமப்புறத்தில் மேம்பட்ட செமிகண்டக்டர் வடிவமைப்பு மையத்தை உருவாக்க நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்' என்று பதிவிட்டார்.ஜோஹோ தனது முதல் கிராமப்புற அலுவலகத்தை கடந்த 2011ல் மத்தளம்பாறையில் ஆறு ஊழியர்களுடன் துவங்கியது. இப்போது இங்கு 500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 'ஜோஹோ ஸ்கூல்ஸ் ஆப் லேர்னிங்'கின் ஒரு பிரிவும் உள்ளது. இதன் வாயிலாக 12ம் வகுப்பு அல்லது டிப்ளமா படிப்பை முடித்த மாணவர்கள் பயிற்சி பெற்று, ஊழியர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி