உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சென்னையில் கிடங்குகளுக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிப்பு

சென்னையில் கிடங்குகளுக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிப்பு

புதுடில்லி:சென்னையில் கிடங்குகளுக்கான தேவை, நடப்பாண்டின் முதல் அரையாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம் தேசிய தலைநகர் பகுதியில், 77 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'வெஸ்டியன்' நிறுவனம் தெரிவித்திருப்ப தாவது: நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், கிடங்குகளுக்கான தேவை, ஏழு முக்கிய நகரங்களில் 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.முந்தைய ஆண்டில் 1.54 கோடி சதுர அடியாக இருந்தது, நடப்பாண்டில் 1.66 கோடி சதுர அடியாக அதிகரித்துள்ளது.கிடங்குகளுக்கான தேவை, டில்லி தலைநகர் பகுதி, கோல்கட்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் சரிந்துள்ளன. மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து உள்ளன. குறிப்பாக சென்னையில் தேவை, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை