மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ., வருகிறது ஸ்டட்ஸ் ஹெல்மெட்
28-Mar-2025
புதுடில்லி:'போட்' என்ற பெயரில் இயர்போன், டிஜிட்டல் கடிகாரங்கள் உள்ளிட்ட சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வரும் மும்பையைச் சேர்ந்த 'இமேஜின் மார்க்கெட்டிங்' நிறுவனம், புதிய பங்கு வெளியீடுக்கு, சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் ரகசிய முறையில் விண்ணப்பித்து உள்ளது.கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்ட இமேஜின் மார்க்கெட்டிங் நிறுவனம், முன்னதாக கடந்த 2022ல் புதிய பங்கு வெளியீடுக்கு வர திட்டமிட்டது.ஆனால், அப்போது வரவில்லை. தற்போது இரண்டாவது முறையாக ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்து உள்ளது. ஏற்கனவே, முதலீட்டாளர் வசமுள்ள 1,100 கோடி ரூபாய் பங்குகள் விற்பனையுடன், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 900 கோடி என, 2,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமான முறையில் விண்ணப்பிக்கும்போது, செபியின் ஒப்புதல் பெற்ற 12 மாதங்களுக்குள் ஐ.பி.ஓ., வர வேண்டும். ரகசிய முறையில் விண்ணப்பித்து இருப்பதால், ஐ.பி.ஓ., வருவதற்கு 18 மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும்.
28-Mar-2025