மேலும் செய்திகள்
கர்நாடகாவில் 11 மாதங்களில் ரூ.4.71 லட்சம் கோடி முதலீடு
17-Jan-2026 | 1
நிதித்துறை பொருளாதார வளர்ச்சிக்கு மாற்றல்ல
15-Jan-2026 | 1
ஏற்றுமதிக்கு உதவ ரூ.3,362 கோடி கடன்!
11-Jan-2026
விபோர் ஸ்டீல் டியூப்ஸ்கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில் உள்ள பல்வேறு கனரக பொறியியல் தொழில் நிறுவனங்களுக்கு இரும்பு குழாய்கள் மற்றும் டியூப்களை தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. நீர் போக்குவரத்து, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற நச்சுத்தன்மையற்ற வினியோகங்களில் பயன்படுத்துவதற்கான மின்சார எதிர்ப்புசக்தி கொண்ட இ.ஆர்.டபுள்யு குழாய்கள்; விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் குழாய்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் பயன்படுத்தப்படும் விபத்து தடைகளையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு மகாராஷ்டிராவின் ராய்காட் மற்றும் தெலுங்கானாவின் மகபூப் நகர் ஆகிய இரண்டு இடங்களில் உற்பத்தி நிலையங்களும், ஹரியானாவின் ஹிசாரில் ஒரு சேமிப்பு கிடங்கும் உள்ளது.நிதி நிலவரம்: கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 1,114 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 21 கோடி ரூபாய்.துவங்கும் நாள்: 13.02.2024முடியும் நாள்: 15.02.2024பட்டியலிடும் நாள்: 20.02.2024பட்டியலிடப்படும் சந்தை: பி.எஸ்.இ., என்.எஸ்.இ., பங்கு விலை: 141 - 151 ரூபாய்பங்கின் முகமதிப்பு: ரூ. 10புதிய பங்கு விற்பனை: ரூ.72.17 கோடிமொத்த பங்கு விற்பனை: ரூ.72.17 கோடி
17-Jan-2026 | 1
15-Jan-2026 | 1
11-Jan-2026