மேலும் செய்திகள்
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.19,860 கோடி முதலீடு
01-Jun-2025
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் லேசான ஏற்றத்துடன் நிறைவு செய்தன. மீண்டும் அன்னிய முதலீடுகள் வெளியேறத் துவங்கினாலும், உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. இதனால், நேற்று முன்தினம் சந்தை கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி.,வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்த முன் எச்சரிக்கையுடனேயே சந்தையை அணுகினர்.இதனால், சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நாள் முழுதும்ஊசலாட்டத்துடன் காணப்பட்டன.உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, நேற்று ஹாங்காங் சந்தைக்கு விடுமுறை. தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்; ஜப்பானின் நிக்கி குறியீடு சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.உயர்வுக்கு காரணங்கள்
1உலகளாவிய சந்தைகளில் சாதகமான சூழல்2முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதுஅன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,970 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை 1 பேரலுக்கு 0.22 சதவீதம் குறைந்து, 66.56 அமெரிக்க டாலராக இருந்தது
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா அதிகரித்து, 85.59 ரூபாயாக இருந்தது
01-Jun-2025