மேலும் செய்திகள்
புகார் பெட்டி
2 hour(s) ago
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
2 hour(s) ago
தெரு நாய்களுக்கு மீண்டும் கருத்தடை
2 hour(s) ago
புதுடில்லி: மாநிலகட்சிகள் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெறுவதில் இருந்து வந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியி்டும் மாநில அளவிலான கட்சிகள் தேர்தல்களில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறும் பட்சத்தில் மட்டுமே நிலையான சின்னம் ஒதுக்கப்படும். நிலையான சின்னம் பெறப்பட்டு அதனை மக்கள் மனதில் பதிய வைத்தால் தான் மக்கள் தங்களின் கட்சிகளுக்கு வாக்குகள் கிடைக்கும் என்பதால் மாநில கட்சியின் தலைவர்கள் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது.இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் அங்கீகாரம் பெறமுடியாமல் போனாலும் கூடுதல் தொகுதியில் வெற்றி பெற்றறுள்ளதை காரணம் காட்டி அங்கீகாரம் பெற்று வந்தது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்குவதில் இருந்து வந்த விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை என்ற போதிலும் மொத்த எட்டு சதவீத அளவிற்கு வாக்குகள் பெற்றிருக்கும் பட்சத்தில் மாநிலகட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்கப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago