உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முத்ரா யோஜனா உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

முத்ரா யோஜனா உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'முத்ரா' கடன் வரம்பை, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.சிறு, குறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கடன் வரம்பு, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கப்படுகிறது.பிணையமில்லாத சிறு கடன்கள் வழங்குவதற்கான இத்திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை கடன்களை வழங்கி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூலை 24, 2024 07:57

எந்த வங்கியும் இருபது லட்சம் ரூபாய் எந்த விதமான செக்யூரிடியும் இல்லாமல் முத்ரா ஸ்கீமில் கொடுப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை! பழைய ஸ்கீமிலேயே பத்து லட்சம் ரூபாய் யாருக்கும் செக்யூரிட்டி இல்லாமல் கொடுத்திருப்பார்கள் என்றும் நம்பிக்கை இல்லை. நானும் ஒரு வங்கியில் உயரதிகாரியாக முப்பத்தொன்பது வருடங்கள் பணி புரிந்த அனுபவத்தில் சொல்கிறேன்!


Sankar Ramu
ஜூலை 24, 2024 08:54

நிறைய பேர் பயனாளிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் அண்ணாமலையின் யாத்திரையில் பயனடைந்தவர்கள் பங்கேற்றனர்


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 09:29

முன்பு ஜனார்த்தன பூஜாரி நிதியமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் வட்ட மாவட்ட செயலாளர் சிபாரிசு அழுத்தத்தில் போலி ஏழைகளுக்கு லோன் திருவிழா மேளாவில் கடன்களை வாரிக் கொடுத்த வரலாறு உங்களுக்கு நினைவிருக்கும். இப்போ நிஜமாகவே ஜாமீன் இல்லாத கடன் கொடுக்கப்படுகிறது.


Kasimani Baskaran
ஜூலை 24, 2024 05:22

ஏழைகள் வாங்கிய கடனை திரும்ப கொடுத்து விடுவதால் வந்த நல்ல விஷயம். பலருக்கு உபயோகமானது சிறப்பு .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை