உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிக்கு வக்காலத்து வாங்குவதா ?: காங்., எம்.பி.க்கு பா.ஜ., கண்டனம்

பயங்கரவாதிக்கு வக்காலத்து வாங்குவதா ?: காங்., எம்.பி.க்கு பா.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காலிஸ்தான் ஆதரவு எம்.பி.யான அம்ரித்பால்சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என பார்லிமென்ட்டில் காங். எம்.பி., சரண்ஜித்சிங் சன்னி பேசியதற்கு பா.ஜ.,கண்டனம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டத்தொடரில் பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சரண்ஜித் லோக்சபாவில் பேசியது, இங்கு மத்தியில் ஆளும் பா.ஜ., தினம், தினம் அவசர நிலை பிரகடனத்தைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் இன்று நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலைதான் நடக்கிறது. பஞ்சாபில் காதூர் ஷாகிப் தொகுதி 20 லட்சம் மக்களால் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அம்ரித்பால் சிங், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளார். தொகுதி மக்களுக்கு சேவை செய்ய அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.காங். எம்.பி.யின் இந்த பேச்சிற்கு பா.ஜ. எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியது, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவாளார். ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவாக காங்., எம்.பி. பேசுவது, பஞ்சாபில் சட்டம், ஒழுங்கு சீர்கெட காரணமாகிவிடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Priyan Vadanad
ஜூலை 25, 2024 22:23

மூச்சுக்கு மூச்சு தீவிரவாதி, தேசத்துரோகி ...... இந்த புராணங்களை விட்டுத்தொலைத்தால்தான் என்ன?/நாட்டு வளர்ச்சிக்கு என்னதான் கிழிக்கிறீங்க?


Ravi Manickam
ஜூலை 25, 2024 22:54

பிரியன் வடநாடன், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை அது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் இவர்கள் இந்து கோயில்களை மட்டும் vandalism செய்வது ஏன்? இந்துகளுக்கும், இந்து MPக்கும் கொலைமிரட்டல் விட்டு கனடாவை விட்டு வெளியேற மிரட்டல் விடுபவர்களை உன்னுடைய பாசையில் என்னவென்று அழைப்பது நீயே சொல்லு. அல்பெர்டா தீயினால் பற்றி எரிகிறது ஆனால் இவர்களுக்கு அதைப்பற்றி துளியும் கவலையில்லாமல் வரும் 28ம் தேதி காலிஸ்தான் Referendum நடத்துகிறார்கள். இவர்கள் மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்களால் விரட்டியடிக்கும் காலம் வெகுதூரமில்லை.


S. Narayanan
ஜூலை 25, 2024 22:22

அந்நிய நாடுகளில் இருந்து வரும் பணம் தடை செய்யப்பட்டதால் காங்கிரஸ் இப்படி பேசுகிறது


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 21:46

விஷப்பாம்புக்கு பாலூட்டும் காங்கிரஸ்.


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 21:45

பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டு அதே பயங்கரவாதத்தால் வீழ்ந்தார் இந்திரா. காங்கிரஸ் வளர்த்து விட்ட புலிகளுடன் மோதப்போய் ராஜிவ் கொல்லப்பட்டார். இவற்றாலெல்லாம் ராகுலுக்கு புத்தி வந்து விடுமா? வராட்டி அவருக்குத்தான் ஆபத்து.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி