உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி இன்று வயநாடு வருகை

மோடி இன்று வயநாடு வருகை

வயநாடு; வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று பிரதமர் மோடி. வயநாடு வருகை தர உள்ளார்.கேரள மாநிலம். வயநாடு மாவட்டத்தில் கடந்த, 30ம் தேதி முண்டக்கல், சூரல்மலை ஆகிய இரு பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இதுவரை இல்லாத வகையில் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டன. இதுவர 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று (ஆக.10) பார்வையிட கேரளா வருகிறார். கண்ணுர் வழியாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் ராணுவத்தினர் கட்டியுள்ள இரும்பு பாலத்தையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.மோடியுடன் கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ரகுசேட்
ஆக 10, 2024 09:36

நல்ல வேளை. அடிச்சி முடக்க அங்கே ஆளுங்களே இல்லை.


அசோக் PB, சென்னை
ஆக 10, 2024 09:09

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் சோக நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.. இது கூட இடைத்தேர்தல் வரும் என்பதினால் இருக்கலாம்.


T.sthivinayagam
ஆக 10, 2024 05:38

வயனாடு இடைத்தேர் தல். தேதி அறிவிக்க வாய்ப்பு


மேலும் செய்திகள்