உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைவர்கள் விரைவில் விடுதலை :திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் சஞ்சய் சிங்

தலைவர்கள் விரைவில் விடுதலை :திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் சஞ்சய் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் விடுதலையாவார்கள் நம்பிக்கையுடன் இருங்கள் என உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்தஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் கூறினார். டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை வழக்கில் மாஜி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி.,சஞ்சய்சிங், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சஞ்சய்சிங் கடந்த ஆறு மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரித்த நீதிபதி சஞ்சய்சிங்கிற்கு ஜாமின் வழங்கினார். இதையடுத்து திகார் சிறையிலிருந்து இரவு 8 மணியளவில் வெளியே வந்தார். அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். தன்னை வரவேற்க திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் சில நிமிடம் பேசினார். அப்போதுநான் விடுதலை ஆனதை கொண்டாட நேரம் இதுவல்ல. நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டிய நேரம இது. கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் விடுதலையாவார்கள்.நம்பிக்கையுடன் இருங்கள் என்றார். தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sankaran Natarajan
ஏப் 04, 2024 22:36

உச்ச நீதி மன்றம் சமயத்தில் விசாரணை நீதிமன்றம் போல் நடந்து கொள்கிறது நீதிபதி பாலனத்தின் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றம், தர்மத்தின் வழிநின்று நேர்மை பொதுவாழ்வில் தூய்மை இவற்றை நிலைநிறுத்துவதற்காக பாடுபடவேண்டும்


Shankar
ஏப் 03, 2024 23:07

ஜாமீன் கிடைச்சதுக்கே இவ்வளவு பில்டப்பா ?


தாமரை மலர்கிறது
ஏப் 03, 2024 22:59

நூறு கோடி ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு , ஊளையிடுகிறார்கள் தேர்தலுக்கு பின், ஆம் ஆத்மீ கட்சி தலைவர்கள் அனைவரும் உள்ளே போகபோகிறார்கள் ஆட்சி கவிழபோகிறது


praba karan
ஏப் 03, 2024 22:03

தலைவர்கள் எல்லாம் திகார் தான் போறாங்க வசதி நல்லா இருக்குமோ


subramanian
ஏப் 03, 2024 21:44

ஊழல் செய்த பிறகு என்ன திமிர் வந்து விடுகிறது


Anantharaman Srinivasan
ஏப் 03, 2024 21:44

இந்திரா காந்தி எல்லா தலைவர்களையும் சிறையில் வைத்ததுபோல் இவர்களுக்கும் அந்த ஆசை


Ramesh Sargam
ஏப் 03, 2024 21:42

குற்றம் செய்தவர்கள் எதற்கு விடுதலையாக வேண்டும் பார்க்கப்போனால் குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கவேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி