உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன மாஞ்சா நுால் 12,000 பண்டல் பறிமுதல் 3 பேர் கைது; தனிப்படை கண்காணிப்பு

சீன மாஞ்சா நுால் 12,000 பண்டல் பறிமுதல் 3 பேர் கைது; தனிப்படை கண்காணிப்பு

புதுடில்லி:தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா நூல் 12,000 பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் குற்றப்பிரிவு சிறப்பு கமிஷனர் ஷாலினி சிங் கூறியதாவது:சீன மாஞ்சா நூல் டில்லி அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் சட்டவிரோதமாக அவற்றை விற்கின்றனர்.இந்நிலையில், டில்லி மாநகரப் போலீசின் குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தீவிரமாகக் கண்காணித்து 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12,143 பண்டல் சீன மாஞ்சா நூல் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசியத் தகவல் அடிப்படையில் பிரேம் சந்த்,40, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், ரோஹிணி 7வது செக்டாரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ​​11,820 பண்டல் சீன மாஞ்சா நூல் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அதே பகுதியில் அட்னான் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 23 பண்டல்கள் மீட்கப்பட்டன. அதேபோல, தர்யாகஞ்சில் நடத்திய சோதனையில் 240 பண்டல் சீன மாஞ்சா நூலுடன் முகமது அகிப் என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும், ஆசாத் மார்க்கெட்டில் அஸ்ஜத் என்பவரை கைது செய்து 60 பண்டல் மாஞ்சா நூல் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள பிரேம் சந்த், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோஹியை சேர்ந்தவர். ரோஹிணி 7வது செக்டாரில் ஸ்டேஷனரி கடை நடத்துகிறார்.இந்த ஆண்டில் இதுவரை சீன மாஞ்சா நூல் விற்ற 79 பேர் கைது செய்யப்பட்டு 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சீன மாஞ்சா நூல் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 2017ம் ஆண்டு முற்றிலும் தடை செய்யப்பட்டது. சட்டவிரோதமாக சீன மாஞ்சா விற்போரை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி, மேற்கு டில்லியின் பஷ்சிம் விஹாரில் தந்தையுடன் பைக்கில் சென்ற 7 வயது சிறுமி சீன மஞ்சா நூல் கழுத்தை அறுத்து உயிரிழந்தார். கண்ணாடி துகள் மற்றும் நைலான் கயிறு அற்ற பருத்தி நூலை பயன்படுத்தி பட்டம் விட அனுமதி உள்ளது,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை