| ADDED : மே 28, 2024 06:23 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4ம் தேதி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஜூன் 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும். மாநிலம் முழுதும் 28 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில், மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளதால், மூன்று ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதன்படி, பெங்., சென்ட்ரல் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, வசந்த்நகரில் உள்ள மவுன்ட் கார்மல் கல்லுாரியிலும்; பெங்., வடக்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, விட்டல் மல்லையா சாலையின் செயின்ட் ஜோசப் இண்டியன் உயர்நிலைப் பள்ளியிலும்; பெங்., தெற்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரியிலும் நடக்க உள்ளன.இந்நிலையில், நகர் முழுதும், அன்று காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று உத்தரவிட்டார்.இதுபோன்று, மற்ற நகரங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.