உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்று திறனாளியை அவமதித்து வீடியோ எடுத்த 2 பேர் கைது 

மாற்று திறனாளியை அவமதித்து வீடியோ எடுத்த 2 பேர் கைது 

பெங்களூரு : பெங்களூரை சேர்ந்தவர் ரோகன் கரியப்பா, 30. ஆர்.ஜே., எனும் ரேடியோ ஜாக்கியாக உள்ளார். சில தினங்களுக்கு முன், அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் ரோகனும், அவரது நண்பர் சரவண் பட்டாச்சார்யா, 35 என்பவரும் இணைந்து ஒரு வீடியோ எடுத்தனர்.ரோகன் கிண்டல் செய்து வீடியோவில் பேசும் போது, காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர் போன்று சரவண் சைகையில் பேசினார். இந்த வீடியோ வேகமாக பரவியது. மாற்று திறனாளிகளை அவமதித்து விட்டதாக, ரோகன், சரவண் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்கள் இருவரையும் கைது செய்ய கோரி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்தனர். இந்த புகார், சி.சி.பி., சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோகன், சரவணை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தஞ்சை மன்னர்
ஜூலை 27, 2024 16:16

அப்படி பார்த்தால் முதலில் கைது செய்யப்படவேண்டியவர்கள் செய்யப்படவேண்டியவர்கள் காமெடி நடிகர்கள்தான் இது ஏதோ அரசியல் வாதிகளின் போல போல இருக்கு


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ