| ADDED : மே 02, 2024 06:29 AM
விஜயபுரா: தேர்தல் பணிக்கு செல்லாத இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.லோக்சபா தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் உட்பட மத்திய, மாநில அலுவலர்கள், அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். சிலர் உடல் நிலை சரியில்லை என, பொய்யான காரணம் கூறி, தேர்தல் பணிகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விஜயபுரா, பசவனபாகேவாடியின், அப்பிஹாளா அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பரத் குடேதா, தாளிகோட்டேவின், ஹாலகோடா அரசு உருது தொடக்க பள்ளி ஆசிரியை முல்லா ஆகியோரை தேர்தல் பணிக்கு நியமித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் இவர்கள் தேர்தல் பணிக்கு செல்லவில்லை. எனவே இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, விஜயபுரா மாவட்ட கலெக்டர் பூபாலன், நேற்று உத்தரவிட்டார்.