உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 சிறுவர்கள் எஸ்கேப் 3 போலீசார் சஸ்பெண்ட்

3 சிறுவர்கள் எஸ்கேப் 3 போலீசார் சஸ்பெண்ட்

முசாபர்நகர்:போலீஸ் காவலில் இருந்து தப்பிய மூன்று சிறுவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் குடானா கிராமத்தில் நேற்று முன் தினம் நடந்த திருட்டு வழக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மீரட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் மூவரையும் ஒப்படைக்க போலீசார் காரில் நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது, போலீஸ் காவலில் இருந்து மூவரும் தப்பிச் சென்றனர். மூவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதற்கிடையில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக, சிறுவர்களை தப்பவிட்ட 3 போலீசாரையும் 'சஸ்பெண்ட்' செய்து முசாபர்நகர் எஸ்.பி. அபிஷேக் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை