உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொத்து குவித்த பொறியாளருக்கு 4 ஆண்டு

சொத்து குவித்த பொறியாளருக்கு 4 ஆண்டு

பீதர், : சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில், காரஞ்சா திட்டத்தின் உதவி பொறியாளருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, பீதர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பீதரின், குருநகர் காலனியில் வசிப்பவர் பிரோஜுதீன். இவர் 1982ல் உதவி பொறியாளராக, அரசு பணியில் சேர்ந்தார். வெவ்வேறு துறைகளில் பணியாற்றினார். 2008ல் காரஞ்சா கால்வாய் திட்டத்தின் உதவி பொறியாளராக பணியாற்றினார். அப்போது, இவர் வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக, லோக் ஆயுக்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், 2008 பிப்ரவரி 6ல் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். பெருமளவில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.பிரோஜுதீன் அரசு பணிக்கு சேர்ந்த 1982 முதல் 2008 வரை அவரது அசையும், அசையா சொத்துகளை ஆய்வு செய்தபோது, வருவாய்க்கும் அதிகமாக பல மடங்கு சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இவர் மீது வழக்குப் பதிவு செய்த லோக் ஆயுக்தா போலீசார், விசாரணையை முடித்து பீதர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் பிரோஜுதீன், வருவாயை விட 20 சதவீதம் சொத்து குவித்தது உறுதியானது. எனவே, இவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

cbonf
மே 29, 2024 21:55

இந்த முறை பதவி ஏற்ற உடனே மோதி அவர்கள் நாட்டில் உள்ள எல்லா அரசியல் ஊழல் பெருச்சாளிகளையும் உள்ளே தள்ளுவார் என்பது உறுதி. சுமார் இருபது டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் அசைய சொத்துக்களை கைப்பற்ற ஏற்கனவே திட்டங்கள் தயார்


P.Sekaran
மே 29, 2024 09:45

நம் நாட்டில் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். எல்லோரும் லஞ்சத்தில் வந்த பணத்தை வைத்துக்கொண்டு மேல்கோர்ட்டிற்கு சென்று இதை ஒன்றும் இல்லாதவாறு செய்வார்கள். இதற்கு உடனே இவர்கள் சொத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யவேண்டும். 25 லட்சம் அபராதம் விதித்தால் வாங்கிய லஞ்சம் ஈடு ஆகிவிடுமா 4 வருடம் சிறையில் இருந்தால் சரியாகிவிடுமா. ஒரு ஞாயம் வேண்டாமா சட்டத்தில் ஓட்டைகள் இருக்கிறது முதலில் அதை சரிசெய்ய வேண்டும் இருக்கிற சட்டத்தை வைத்துக்கொண்டுதான் தீர்ப்பு சொல்வார்கள். முதலில் சரிசெய்ய வேண்டியது சட்டத்தை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை