உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 42 தென்னை மரங்கள் நிலத்தகராறில் வெட்டி சாய்ப்பு

42 தென்னை மரங்கள் நிலத்தகராறில் வெட்டி சாய்ப்பு

துமகூரு : நிலத்தகராறில், 42 தென்னை மரங்களை வெட்டி சாய்த்த தந்தை, மகன்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.துமகூரு துருவகெரே தண்டினசிவாரா அருகே அப்பாசந்திரா கிராமத்தில் வசிப்பவர் சித்தகங்கம்மா, 55. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் கிராமத்தில் உள்ளது. அங்கு 42 தென்னை மரங்களை வளர்த்தார்.இந்நிலையில், சில மாதங்களாக சித்தகங்கம்மாவுக்கும், பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த காலேகவுடா என்பவருக்கும் அடிக்கடி நில தகராறு ஏற்பட்டது. சித்தகங்கம்மாவின் தோட்டத்தில் ஒரு பகுதி, தனக்கு சொந்தமானது என்று காலேகவுடா கூறினார். இந்நிலையில் நேற்று காலை, சித்தகங்கம்மா தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது 42 தென்னை மரங்களும் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தன.நிலத்தகராறில் தென்னை மரங்களை வெட்டி சாய்த்ததாக காலே கவுடா, அவரது மகன்கள் இருவர் மீது, தண்டினசிவாரா போலீசில் சித்தகங்கம்மா புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி