உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வட மாநிலங்களில் வெப்ப அலை பிரயாக்ராஜில் 47.6 டிகிரி செல்ஷியஸ்

வட மாநிலங்களில் வெப்ப அலை பிரயாக்ராஜில் 47.6 டிகிரி செல்ஷியஸ்

புதுடில்லி, டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் இமயமலை பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வாட்டி எடுக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்நிலை படிப்படியாக மாறும் என கூறப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், 17ம் தேதி, நாட்டிலேயே மிகவும் உச்சபட்ச அளவான, 47.6 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. இதனால், டில்லி, அதையொட்டியுள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் தவிர, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீஹார், வடக்கு மத்திய பிரதேசம், ஒடிசாவின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அலை வீசி வருகிறது.ராஜஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில், 44 - 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பைவிட, 5 - 8 டிகிரி அதிகமாகும்.இதனால், பஞ்சாப், ஹரியானா, டில்லி, உத்தரகண்ட், பீஹார் மாநிலங்களுக்கு, 18ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப் பட்டது.உத்தர பிரதேசத்தில் வெப்ப அலை, மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என, கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில், தென்மேற்கு பருவமழை, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திராவின் கடலோரப் பகுதிகள், வங்கக் கடலின் வடமேற்கு பகுதிகள், மேற்கு வங்கத்தின் கங்கை படுகைகள் உள்ளிட்டவற்றுக்கு அடுத்த சில நாட்களில் முன்னேற்றம் அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை