மேலும் செய்திகள்
பீஹாரில் 121 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்
32 minutes ago
டில்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் என கணிப்பு
3 hour(s) ago
பைக் மீது லாரி மோதி குடும்பமே உயிரிழப்பு
3 hour(s) ago
தாவணகெரே லோக்சபா தொகுதியில், இரண்டு முஸ்லிம்கள் உட்பட 5 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தாவணகெரே லோக்சபா தொகுதி வரலாற்றில், சுயேச்சை வேட்பாளராக பீகிபாயி இரண்டு முறை போட்டியிட்டார். அதன்பின் பெண் வேட்பாளர்கள் களமிறங்கவே இல்லை. இப்போது ஐந்து பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக, இன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் மனைவி காயத்ரி, காங்கிரஸ் சார்பில் அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி பிரபா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இவர்களுடன், மூன்று பெண்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். காயத்ரி சித்தேஷி, ஜபீன் தாஜ், தஸ்லிம் பானு ஆகியோரும் களத்தில் உள்ளனர். தேசிய கட்சிகள் இம்முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதால், மற்ற பெண்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது.ஜபீனா தாஜ் அரசியல் பின்னணி கொண்டவர். இவரது தந்தை, சகோதரர்கள் ஜனதா பரிவாரில் இருந்தவர்கள். தந்தை யூசுப் சாப், ராமகிருஷ்ண ஹெக்டே அரசில், தாவணகெரே நகர திட்ட ஆணைய உறுப்பினராக இருந்தார்.இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லியில் போராட்டம் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து, தாவணகெரேவில் நடந்த போராட்டத்துக்கு, தலைமை ஏற்றவர் ஜபீனா தாஜ். கடந்த முறை தாவணகேரே மாநகராட்சி தேர்தலில், ம.ஜ.த., சார்பில் களமிறங்கி தோற்றார். இம்முறை லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.மற்றொரு சுயேச்சையான தஸ்லீம் பானுவிடம் அரசியல் பின்னணி இல்லை. இவரது குடும்பத்தில் யாரும், இதுவரை தேர்தலில் போட்டியிட்டது இல்லை.கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் சித்தேஸ்வரை எதிர்த்து, சித்தேஷி போட்டியிட்டார். இதில் சித்தேஸ்வர் வெற்றி பெற்றார். சித்தேஷி 2,732 ஓட்டுகளை பெற்றிருந்தார். இம்முறை சித்தேஸ்வருக்கு பதிலாக, அவரது மனைவி காயத்ரிக்கு, பா.ஜ., சீட் கொடுத்தது. இவரை எதிர்த்து சித்தேஷியின் மனைவி காயத்ரி போட்டியிடுகிறார். கணவர்களின் பெயரும், மனைவியர் பெயரும் ஒன்றாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது- நமது நிருபர் -.
32 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago