உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு: ராகுல் வாக்குறுதி

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு: ராகுல் வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் அக்கட்சி எம்.பி ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏன் இன்றும் 3ல் ஒரு பெண் மட்டுமே வேலை செய்கிறார்? 10 அரசு வேலைகளில் ஒரு பெண் மட்டும் ஏன்?. இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 50% இல்லையா? மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் பங்கு 50% இல்லையா? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது?. மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள். 50% அரசுப் பதவிகளில் பெண்களைக் கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும் . பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள். இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 29, 2024 22:04

முதலில் வேட்பாளர்களில் % பெண்களை நிறுத்துங்கள்


தமிழ்வேள்
மார் 29, 2024 20:35

பப்புவாவா டுமீல் நாட்டில் வந்து இப்படி கூவு சாராய கும்பல் இதையும் நம்பி ஓட்டு குத்தும்வாவா


பேசும் தமிழன்
மார் 29, 2024 19:45

பப்பு..... காசா பணமா..... சும்மா அடித்து விடு... நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு வேலை என்று கதை விட்டாலும்.... தமிழக மக்கள் நம்புவார்கள்.... ஏமாந்து போய் ஓட்டு போடுவார்கள்..... ஆனால் வடக்கே உள்ள மக்கள் உமது பொய் பேச்சை நம்பாமல்.... உமக்கு ஓட்டு போட மாட்டார்கள்.


Ayen
மார் 29, 2024 16:42

இட ஒதுக்கீடு ஒரு பித்தலாட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவசியம். அதிலும் கல்விக்கு இலவச கல்வி ., தரமான கல்வி அவசியம். ஆனால் வேலை வாய்ப்பு தகுதியானவர்களுக்கு மட்டும் என்று அறிவித்தாலே தாழ்த்தபடுத்தப்பட்ட சமுதாயத்தினர் முன்னுக்கு வருவார்கள். வேலை தேர்வுக்கு தேர்தல் குழுவில் பல ஜாதியினர் இடம் பெற வேண்டும்.


Lion Drsekar
மார் 29, 2024 16:39

வாக்குறுதி கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விடுவார் பிறகு அடுத்த தேர்தலுக்கு மக்களை சந்திப்பார் வந்தே மாதரம்


என்றும் இந்தியன்
மார் 29, 2024 17:18

% நான் பிரதமரானால்???வீதியில் போகும் நாய் யாரை எதை பார்த்தாலும் எப்போதும் குலைக்கும் அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்


Karuppusamy k
மார் 29, 2024 15:55

good


சிவம்
மார் 29, 2024 15:15

இந்த இடஒதுக்கீடு முப்படை ராணுவம், எல்லைபடை, மற்றும் அனைத்து மாநில காவல் துறை இவற்றிற்கும் பொருந்துமா?


ஆரூர் ரங்
மார் 29, 2024 15:03

முதல்ல உங்க கட்சியில்MP MLA க்களின் எண்ணிக்கையில் பாதியளவு பெண்களுக்கு ஒதுக்குங்கள்? பார்ப்போம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை