உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5, 8, 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? சுப்ரீம் கோர்ட்டில் குழந்தைகள் உரிமை ஆணையம் மனு

5, 8, 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? சுப்ரீம் கோர்ட்டில் குழந்தைகள் உரிமை ஆணையம் மனு

பெங்களூரு: கோடை விடுமுறை முடிந்து, இந்த மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 5, 8, 9ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், மாணவர்கள், பெற்றோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடும்படி, கல்வி துறைக்கு உத்தரவிடும்படி, உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமை ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.கர்நாடகாவில் தற்போது, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., இரண்டாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1 - 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதற்கிடையில், 5, 8, 9, பி.யு.சி., முதல் வகுப்புகளுக்கு, 2023 - 24ம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்து தேர்வு நடத்த உத்தரவிட்டது.இந்த, பொதுத்தேர்வை ரத்து செய்யும்படி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எதிர்ப்புக்கிடையில், கடந்த மார்ச்சில் தேர்வு நடந்து முடிந்தது.ஏப்ரல் 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக பள்ளிகள் அறிவித்தன. இதற்கிடையில், தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுஇது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும் ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்டது.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. பல பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு சேர்க்கை துவங்கி விட்டது.ஆனாலும், தேர்வு முடிவுகள் வெளியாகாததால், மாணவர்கள், பெற்றோர் பெரும் கவலை அடைந்துள்ளனர். எப்போது தான் முடிவுகள் வெளியாகும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடும்படி, கல்வி துறைக்கு உத்தரவிடும்படி, உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமை ஆணையம் மனு தாக்கல்செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ